அதிவேகத்தில் ஓவர்டேக் செய்த கார்.. எதிரே வந்த அரசு பஸ்..!! துடிதுடித்து 2 பேர் பலி..!! தேனியில் சோகம்

Accident 2026 2

தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே 3 பேருடன் சென்ற கார், தனக்கு முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது எதிரே குமுளியில் இருந்து தேனி புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் இடித்து சாலையோர சுவற்றில் மோதியது.


இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவத்திற்கு விரைந்து வந்த தேனி போலீசார், காரில் விபத்தில் சிக்கிய அமச்சியாபுரம் பகுதியில் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் முத்துக்குமார்(50), அரண்மனைபுதூர் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி (55), கந்தவேலு (52) ஆகிய 3 பேரை மீட்டனர். அதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

மேலும் படுகாயம் அடைந்த வேலுச்சாமி மற்றும் கந்தவேலுவை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், வேலுச்சாமி செல்லும் வழியிலே உயிரிழந்தார். கந்தவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

முதற்கட்ட விசாரணையில் காரில் வந்த நபர்கள் அதிவேகமாக காரை ஓட்டி வந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தேனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : அமெரிக்கா வைத்த செக்..!! பதிலுக்கு கனடா கொடுத்த ஷாக்..!! 50% வரி விதிப்பு.. வர்த்தக பேச்சுவார்த்தையும் ரத்து..!!

Next Post

அதிகாரிகள் வேண்டுமா? நாங்கள் வேண்டுமா? எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்..!! ஷாக்கில் முதல்வர் விஜய்..!!

Sat Aug 22 , 2026
தமிழ்நாட்டில் இடதுசாரி மாணவர் அமைப்புகளின் போராட்டங்களை ஒடுக்கும் வகையிலும், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை திரட்டும் வகையிலும் அரசு நிர்வாகத்தின் மூலம் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்ட விவகாரத்தில், “அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா?” என முதலமைச்சர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்க கோரி […]
P Shanmugam

You May Like