மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை..!! – நீதிமன்றம் அதிரடி

karathe master

பயிற்சிக்குச் சென்ற மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு பத்து ஆண்டுகள் படுங்காமல் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் தனியார் பள்ளியில் பணியாற்றியபோது, பாலியல் தொல்லை செய்ததாக மாணவி ஒருவர் புகார் அளித்ததன் பேரில் கடந்த 2021-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக மேலும் சில மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் என தெரிவித்தனர்.

இதனையடுத்து, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது. இதையடுத்து, இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில், 2022 மே 19ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

அவருக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட இருந்தது. இந்நிலையில், தண்டனை அறிவிப்பை ஒத்திவைத்தது. இதன்படி, அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது . இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . மேலும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read more: அந்தரத்தில் தலைகீழாய் நின்ற ராட்டினம்.. பீதியில் அலறிய மக்கள்..!! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ..

English Summary

Case of sexual assault on female students: Karate master gets 10 years in prison..!! – Court takes action

Next Post

‘ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் சாப்பிட வேண்டாம், நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கக் கூடாது..’ இதய நோய் நிபுணர் வார்னிங்..

Wed Aug 13 , 2025
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் இதய நோய்கள் பாதிக்கிறது.. உங்கள் இதயத்தைப் பராமரிப்பது என்பது ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை மட்டும் உள்ளடக்கியதல்ல. வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதும், உங்களுக்குத் தெரிந்ததை விட உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை மாற்றுவதும் இதில் அடங்கும். மருத்துவ நிபுணரும் இருதயநோய் நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ரா, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் 5 குறிப்புகள் குறித்து […]
Heart health

You May Like