நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு..! காவல்துறை அதிரடி..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், மன்சூர் அலிகான் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன் என்று பேசினார். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். பின்னர், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் ஐ.பி.சி சட்டபிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களை பயன்படுத்தி மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யவும் தமிழ்நாடு டி.ஜி.பிக்கு அறிவுறுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும் இதுபோன்ற கருத்துகள் கண்டிக்கப்பட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷாவை பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. தமிழ்நாடே என் பக்கம் தான் உள்ளது. இந்த பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தை பார்த்து கேட்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமா? மூத்த நடிகர் எஸ்.வி.சேகர், காரைக்குடியில் ஷர்மா குஷ்பூ பற்றி அவதூறு பேசினார்களே. அவர்கள் பாஜகவில் தானே இருக்கிறார்கள். கைது பண்ண சொல்ல வேண்டியது தானே. நீட் தேர்வுக்கு அனிதா தற்கொலை செய்துக் கொள்ளும் போது இந்த மகளிர் ஆணையம் என்ன செய்துக் கொண்டிருந்தது. வெட்கம், மானம், சூடு, சுரணை இருந்தா நீ தூக்கு மாட்டி சாவு.

மணிப்பூரில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது என்ன செஞ்சிட்டு இருந்தீங்க? என்னுடைய விவகாரத்தில் நடிகர் சங்கம் செய்தது மாபெரும் தவறு. 21 நாட்கள் அவகாசம் கொடுத்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நேற்றில் இருந்து நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நாசர், விஷால் என யாருக்கு அழைத்தாலும் போனை எடுக்க மாட்டேங்குறாங்க. கார்த்தி போனை எடுத்து பூச்சி முருகனை அழைத்து பேச சொன்னார். அவருக்கு கூப்பிட்டால் போனை எடுக்கவில்லை. மன்சூர் அலிகான் என்றால் இளிச்சவாயனா?. ஒழுங்கா நடந்துகோங்க. நான் எந்திரிச்சா ஒரு பிரளயமே கிளம்பும் மன்சூர் அலிகான் என்றால் இளிச்சவாயனா?. ஒழுங்கா நடந்துகோங்க. நான் எந்திரிச்சா ஒரு பிரளயமே கிளம்பும்” என்று பேசினார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக வழக்குபதிய தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், தற்போது நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kathir

Next Post

வேறொருவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி…! சந்தேகித்த கணவன்…! மனைவி எடுத்த விபரீத முடிவு

Tue Nov 21 , 2023
கணவருக்கு தன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மனம் உடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கும்மிடிப்பூண்டி அருகே ராமச்சந்திராபுரத்தில் உள்ள தனியார் ரெடிமேட் ஆடை தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் நேபாளத்தைச் சேர்ந்த பாபின் குருங். இவருடன் இவரது மனைவி அமிகா குருங். இந்நிலையில் அமிகா குருங் செல்போனில் வேறொருவருடன் நீண்ட நேரம் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை பாபின் கண்டித்து இருக்கிறார். […]

You May Like