கேஷ் ஆப் செயலியின் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி படுகொலை! மர்ம நபருக்கு காவல்துறை வலைவீச்சு!

கேஸ் ஆப் செயலியை உருவாக்கிய ஒரு கிரிப்டோ கரன்சியில் முக்கிய பதவி வைத்த வருமான பாப் லீ மர்ம நபர்களால் கத்தியால் குத்திய படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கேஸ் ஆப் செயலியை வடிவமைத்து உருவாக்கியவர் பாப் லீ இவர் கிரிப்டோ கரன்ஸி நிறுவனத்தின் முக்கிய பதவியில் வைத்து வந்தவர். மேலும் கேப் ஜெமினி கூகுள் போன்ற நிறுவனங்களிலும் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருக்கும் மாநாடு ஒன்றிற்காக சென்றிருக்கிறார். அந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டீர் தனது நண்பர்களை சந்திப்பதற்காக அங்கேயே தங்கியிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் இவரது நெஞ்சுப் பகுதியில் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த பாப் லீ தன்னைக் காப்பாற்றுமாறு பல இடமும் கோரிக்கை வைத்துள்ளார் ஆனாலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவருக்கு உதவ யாருமே முன்வரவில்லை. இந்நிலையில் சம்பவமறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் பாப் லீ. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முக்கியமான நபர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பதும் மர்மமாகவே உள்ளது.

Baskar

Next Post

வரும் 12-ம் தேதி, ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு....

Fri Apr 7 , 2023
வரும் 12-ம் தேதி தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.. இதுகுறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மானதாகவும் இருக்கின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக – […]

You May Like