மாணவர்களின் வருகை பதிவேட்டில், ஜாதி விபரங்கள் இருக்கக்கூடாது..!! – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை

Anbil 2025

பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் அணிவதை தடை செய்தும், மாணவர்களின் வருகை பதிவேடில், அவர்களின் ஜாதி தொடர்பான விபரங்கள் இருக்கக்கூடாது  எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:


* அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும், சமூக பிரச்னைகள், ஜாதி பாகுபாடு, பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள், ராகிங் குறித்து தங்களுக்குள் கலந்தாலோசித்து, பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்க திட்டமிட வேண்டும்.

* ஒவ்வொரு வகுப்பறையிலும், மாணவர்களுக்கான இருக்கை ஒதுக்கீடு, உயரத்திற்கேற்ப அவ்வப்போது மாற்றி அமைத்து, அமர வைக்க வேண்டும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தவிர பிற மாணவர்களை, 15 நாட்களுக்கு ஒருமுறை, வரிசை மாற்றி அமரச் செய்ய வேண்டும்.

* மாணவர்களின் வருகை பதிவேடில், அவர்களின் ஜாதி தொடர்பான விபரங்கள் இருக்கக்கூடாது.

* வகுப்பாசிரியர் நேரடியாக அல்லது மறைமுகமாக, மாணவர்களின் ஜாதியை குறிப்பிட்டு அழைக்கவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது.

* மாணவரின் உதவித்தொகை தொடர்பாக பெறப்பட்ட தகவல் தொடர்பு விபரங்களை, வகுப்பறையில் அறிவிக்கக்கூடாது. மாணவர்களை தனியே அழைத்து வழங்க வேண்டும்.

* மாணவர்கள் கையில் வண்ண மணிக்கட்டு பட்டைகள், மோதிரங்கள் அல்லது வேறுபாடுகள் வெளிப்படையாக தெரியக்கூடிய அடையாளங்கள் அணிவதை தடை செய்வதுடன், அவற்றை அணிவதை தடுக்க, பெற்றோருக்கு ஆலோசனையும் வழங்க வேண்டும்.

* மாணவர்கள் தங்கள் ஜாதியை குறிப்பிடும் அல்லது ஜாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் சைக்கிள்களில் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். தவறினால் அவர்களின் பெற்றோரிடம் அறிவுறுத்துவதோடு, கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பள்ளி வளாகங்களில், மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதை தடை செய்வது, கட்டாயமாக்கப்பட வேண்டும்.

* அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அனைத்து மாணவர்களுக்கும் நன்னெறி வகுப்புகள் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்.

* மாணவர் யாரேனும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டால், அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க, பெற்றோருக்கு தலைமை ஆசிரியர் பரிந்துரைக்க வேண்டும்.

* மாணவர்களுக்கு பள்ளி அளவில், வழிகாட்டி ஆசிரியராக ஒருவரை நியமிக்க வேண்டும். மாணவியருக்கு, பெண் ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும்
அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, வழிகள் என, அனைத்து இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.

* அனைத்து வகுப்புகளிலும், விளையாட்டு பாட வேளைகளில், மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்
தவறான தகவல்களை பிறருக்கு பகிரக்கூடாது.

* சமூக ஊடகங்களை நேர்மறையான வழியில் பயன்படுத்த வேண்டும் என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: குடை ரெடியா மக்களே..? காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..!! – வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Next Post

புதிய எடை குறைப்பு ஊசிகள்: பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்!

Mon Jun 30 , 2025
சமீப காலமாக, பலர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். சிலர் எடையைக் குறைக்க சிரமப்படுகிறார்கள். மற்றவர்கள் இந்தப் பிரச்சினைக்கு எளிதான மற்றும் விரைவான தீர்வைத் தேடுகிறார்கள். அதற்காக கொழுப்பைக் குறைக்கும் மாத்திரைகள், சப்ளிமெண்ட்ஸ், பவுடர்கள் மற்றும் ஊசிகள் ஏற்கனவே சந்தையில் பரவலாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் சமீபத்தில் உடல் எடையை குறைக்கும் ஊசிகள் (Weight-loss injections) அறிமுகமாகியுள்ளன. வெகோவி (Wegovy) மற்றும் மவுஞ்சாரோ (Mounjaro) எனும் இந்த மருந்துகள், உலகளவில் […]
obesity drug Wegovy 11zon

You May Like