fbpx

பொதுவாக, இன்றைய காலக்கட்டத்தில் நிறுவனங்களில் பணிபுரியும் பலரும், இமெயில் மூலம் தங்களது ராஜினாமா கடிதங்களை டைப் செய்து அனுப்புவர். இன்னும் சில நிறுவனங்களில் வெறும் பேப்பரில் டைப் செய்து, அதில் கையெழுத்திட்டு அனுப்புவர். ஒருவர் வேலையை விட்டு வெளியேறும்போது, ​​நிறுவனம், மேலாளர் மற்றும் சக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ராஜினாமா கடிதம் எழுதப்படுகிறது. …

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது. அதில், டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட …

திங்களன்று வெளியான ஒரு அறிக்கையின்படி, செயற்கை நுண்ணறிவு (AI) துறை 2027 ஆம் ஆண்டுக்குள் 2.3 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, தற்போதுள்ள திறமையாளர்களை மறுதிறன்படுத்துவதும், மேம்படுத்துவதும் முக்கியம் என்பதை பெய்ன் & கம்பெனியின் அறிக்கை காட்டுகிறது. இந்தியாவில் AI திறமையாளர்களின் எண்ணிக்கை சுமார் 1.2 …

ஆனந்தவிகடன் இணையதளம் முடக்கப்பட்டு இருந்த நிலையில், முடக்கத்தை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூர் ஆனந்த விகடனின் வெளியிடப்பட்டது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய …

OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஆண் குழந்தை பிறந்த செய்தியை X இல் பகிர்ந்து கொண்டார், “நான் இவ்வளவு அன்பை ஒருபோதும் உணர்ந்ததில்லை” என்ற செய்தியுடன் தனது ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். அந்த பதிவில், “Welcome to the world, Little Guy! அவன் சீக்கிரமா வந்துட்டான், கொஞ்ச நாள் NICU-ல இருக்கப் …

தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வான ‘ஃபிக்கி ( FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ இன்று முதல் 2 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது.

இந்தியாவின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறை குறிப்பிட்ட மாற்றத்தை அனுபவித்து வருகிறது. இது உலகளாவிய படைப்பாற்றல் பாதையை உருவாக்க முக்கிய பங்காற்றுகின்றன. …

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணம் வாங்கிக் கொண்டு வேலை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அவரை கைது செய்து …

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கமே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

கேரளாவின் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது. திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் நேற்று முன்தினம் அரசுக்கு சொந்தமான …

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பயணித்த விமானமானது, தரையிறங்க முடியாமல், வானில் 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு, இண்டிகோ விமானம் மூலம் சென்றுள்ளார். அப்போது, மதுரை அருகே விமானமானது சென்றபோது, மழை மேகங்கள் சூழ்ந்திருந்திருக்கின்றன. இதனால், உடனடியாக தரையிறங்குவதில் …

சசிகலாவிற்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொலைகாட்சி நிறுவனத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக சசிகலா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து …