ஐஏஎஸ் அதிகாரிகள் 55 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி.. * வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளராக ஷிபா பிரபாக சதீஷ் நியமனம். * CMDA உறுப்பினர் செயலாளராக பிரகாஷ் நியமனம். * நிதித்துறை சிறப்புச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம். […]

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் எதிர்பார்த்திருந்த அகவிலைப்படி (DA) உயர்வு, ஜூலை மாதத்தில் 4% வரை இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உள்ள 55% DA, இந்த உயர்வுடன் 59% ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில், ஊழியர்களுக்கான முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA/DR நிலுவைத் தொகையை வழங்குவது பற்றியும் […]

அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடியை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஈரானின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று அமெரிக்காவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட, அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளின் நோக்கத்தை விரிவுபடுத்தியதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். ஈரானின் மத்திய இராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி, அமெரிக்கா தனது நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார். […]

நடிகர் ஸ்ரீகாந்த்-திடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் ஒரு தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகியான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், பிரசாத், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை […]

குமரியில் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளவாய் சுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், எஸ் பி வேலுமணியை எடப்பாடி பழனிச்சாமி நீக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பவகத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மோகன் […]

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி கடந்த 21-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். பொதுவாக ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. இறந்துவிட்டால், அந்த தொகுதி தேர்தல் ஆணையத்தால் காலியானதாக அறிவிக்கப்படும். 6 மாதங்களுக்குள் […]

சினிமா பார்ட்டிகளில் போதைப்பொருள் சப்ளை செய்ததாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‘ரோஜாக்கூட்டம்’, ‘மனசெல்லாம்’, ‘பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போதைப்பொருள் வழக்கில் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் […]

நடிகர் விஜய் முருகர் மாநாட்டில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டிருந்திருப்பார், அதனால்தான் வீட்டுக்கு வந்த ரசிகர்களை அவர் பார்க்கவில்லை என கோவை வைஷ்ணவி விமர்சித்துள்ளார். நடிகர் விஜயின் 51-வது பிறந்த நாளையொட்டி, அவரை நேரில் பார்ப்பதற்காக நீலாங்கரை இல்லத்திற்கு திரண்ட ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் முடிந்தனர். வீட்டுக்குள்ளேயே இருந்த விஜய், வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஒரு நிமிடமும் நேரில் சந்திக்கவில்லை என்பது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து பைக்கில் […]

ஆகஸ்ட் 15, 2025 அன்று தொடங்கப்படும் FASTag வருடாந்திர பாஸ், நெடுஞ்சாலை பயணத்தை மிகவும் மலிவு விலையிலும் தொந்தரவு இல்லாததாகவும் மாற்றும் மத்திய அரசின் ஒரு முயற்சியாகும்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த இந்த திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) செயல்படுத்த உள்ளது. இந்த ப்ரீபெய்டு டோல் திட்டம், தனியார் வாகன உரிமையாளர்கள் ரூ. 3,000 என்ற நிலையான கட்டணத்தில் 200 கட்டணமில்லா பயணங்களைப் பெற […]

சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது. இந்த நடவடிக்கையின் மூலம், வங்கிகள் தங்கள் நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை திருத்தின. பணவீக்கம் குறைந்து வருவதால் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக, SBI, HDFC வங்கி, ICICI வங்கி போன்ற முக்கிய பொது மற்றும் தனியார் வங்கிகள் உடனடியாக தங்கள் வைப்பு விகிதங்களை திருத்தின. பங்குச் சந்தை முதலீட்டு […]