தீபாவளிப் பண்டிகையை ஒட்டி எத்தனை மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கானஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாடை , பட்டாசுகள் என கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும். சிறுவர்கள் , இளைஞர்கள் உள்ளிட்டோர் பட்டாசு […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திருத்தணி அருகே 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை, பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தாமநெறி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருக்கு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் ஏழுமலை வேர்க்கடலை பயிர் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று […]
திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்த காதலியை, கொலை செய்து வீட்டிலேயே புதைத்துவிட்டு குடும்பத்துடன் தப்பிச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கிதாவுத் கிராமத்தைச் சேர்ந்தவர் குஷ்பு. இளம் பெண்ணான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியிலிருந்து மாயமாகியுள்ளார். அப்போது, அவரது தந்தை பிக்ராம் சிங் என்பவர் தனது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது […]
தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் DPI வளாகத்தில் 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணையை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “மழைக்காலத்துக்கு முன்னரே இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள கோப்புகள், வருகைப் பதிவேடு […]
சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஐடி நிறுவனம் அதிகம் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் நியமனம் குறைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் அனைத்து துறைகளும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்த நிலையில், ஐடி துறை எந்தவித மாற்றமும் இன்றி இயங்கி வந்தது. ஐடி ஊழியர்கள் வீடுகளில் இருந்தே 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிலையில், இந்தாண்டு […]
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் காலமானார். 82 வயதான அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஹரியானாவில் உள்ள குருகிராம் மேதாந்தா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருந்து வந்தார். கடந்த 2 நாட்களாகவே அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்து வந்தது. […]
கொரோனா தொற்று உயர்ந்ததை அடுத்து சீனாவில் மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ளது. சீனாவில் பள்ளிகள் தேர்வு முடிந்தவுடன் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. 12 நாளில் 2000க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஃபென்யாங் மாநகரில் கொரோனா அதிகரித்ததை அடுத்து அந்நகரில் பல்வேறு பகுதிகளில் கடைகள் , மால்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. மங்கோலியா மாகாணத்திலும் புதிய பயணிகள் யாரும் உள்ளே வரக்கூடாது […]
ஈரோடு, சேலம், தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த அதிகன மழைக்கு 9 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் கனமழைபெய்து வருகின்றது.உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 9 பேர் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மூன்றாவது நாளாக […]
உக்ரைனில் மீண்டும் போர் தொடங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து நடந்த பயங்கரமான குண்டுவெடிப்புகளில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அடுத்தடுத்தடுத்து முக்கிய பகுதிகளில் குண்டுகள் வெடித்ததால் கார்கள் தீப்பிடித்து கொளுந்துவிட்டெரிந்தது. இது குறித்து கீவ் நகரத்தின் மேயர் விட்டாலி க்லிட்ச்கோ குண்டு வெடிப்பு பற்றி தெரிவித்துள்ளார். ’மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பழமைவாய்ந்த நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பல்வேறு அரசு […]