மழையின் அளவைப் பொறுத்து பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார் வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், […]

அக்டோபர் 8, 2022 வரையிலான நேரடி வரி வசூலின் தற்காலிக இலக்கம், தொடர்ந்து சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி மொத்த வசூல் ரூ. 8.98 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 23.8% அதிகம். நேரடி வரி வசூல், மொத்த ரீஃபண்டுகள் ரூ. 7.45 லட்சம் கோடியாக, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16.3% அதிகமாக பதிவாகியுள்ளது. 2022-23 […]

தமிழகத்தில் வருகின்ற 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, […]

2023-ம் ஆண்டில் புதிய வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி உண்டு. ஆம் வாகனங்களின் விலையை அதிகரிக்கப் போகிறது. அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் புதிய விதியின் காரணமாக இந்த விலை உயர்வு இருக்கும். உண்மையில், BS6 உமிழ்வு விதிமுறைகளின் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளது. இதனால் […]

கனமழை காரணமாக உத்திரபிரதேசத்தில் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச மாநிலம் அலிகாரில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அலிகாரில் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து என் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அண்டை பகுதிகளில் […]

அதிமுகவின் சின்னம் முடக்கப்படலாம் என முன்னாள் ஐ.டி விங் செயலாளர் பகிரங்க கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணிக்கும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது. அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்ட வில் மற்றும் அம்பு சின்னத்தை இரண்டு குழுக்களும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு […]

ஓய்வுபெற்ற முன்னாள் தமிழ்நாடு டிஜிபி டி.முகர்ஜி உடல் நலக்குறைவால் காலமானார். முன்னாள் காவல்துறை இயக்குநர் டி.முகர்ஜி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஓய்வுபெற்ற டிஜிபி டி.முகர்ஜி கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் […]

இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில் தேர்விற்கு கண்காணிப்பாளர்களாக தமிழ்ப்பாட ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, 15-ம் தேதி […]

தமிழகத்தின் இந்த 4 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நீலகிரி, தஞ்சை, திருவாரூர் , நாகப்பட்டினம்  ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.  கோவை , திருப்பூர் […]

வாயில் கம்பியை சொருகி கொடூரமான முறையில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம் மறையூரில் பழங்குடியின இளைஞர் ரமேஷ் (27) வாயில் கம்பி சொருகிய நிலையில் அவர் சடலமாக கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து பின்னர் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ் உறவினர் சுரேஷ் என்பவருடன் சொத்துத் […]