இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,529 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,060 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Team Leader – Electrical Maintenance பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிப்ளமோ கட்டாயம் தேர்ச்சி பெற்று […]

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2022-23ஆம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கியது. ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பப் பதிவு அக்.3ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில், […]

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என அண்மையில் கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னா, சோட்டு என்ற பெயரிலான புதிய வகை சிலிண்டர்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட இருக்கிறது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் ரேஷன் […]

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 9ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, […]

,க்ஷஆசியா பசிஃபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் எல். முருகன், நெருக்கடியான காலத்தில் அனைவரும் பின்பற்றும்வகையில் தொலைக்காட்சி செய்தி அலை வரிசைகள் கவனமாகவும் உண்மையானதாகவும் நம்பிக்கை உடையதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். “நெருக்கடியான காலத்தில் உண்மை மற்றும் நம்பகத்தன்மை” என்ற உலகளாவிய செய்தி அமைப்பின் மையப்பொருள் மிகவும் பொருத்தமானது என்றும் கொவிட்- 19 பெருந்தொற்று காலத்தில் தகவல் தொற்று […]

கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 203 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும், 5 ‘லேம்ப்’ கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்களின் மூலம், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 40,128 விவசாயிகளுக்கு ரூ.260.32 கோடி பயிர்க்கடனும், 18,083 […]

தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 100 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அரசு முடிவெடுத்துள்ளது. நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை-எளிய மக்கள் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி அந்தந்த பண்டிகைக்கு தேவையான பொருட்களும் […]

டெல்லியின் ஃபரிதாபாத் மருத்துவமனையின் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது நச்சு வாயுவின் காரணமாக நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். ரோஹித், அவரது சகோதரர் ரவி, விஷால் மற்றும் ரவி கோல்டர் ஆகிய நான்கு தொழிலாளர்கள் தான் பலியாகி உள்ளனர். டெல்லியின் தக்ஷின்புரியில் உள்ள சஞ்சய் முகாமில் வசிப்பவர்கள், சந்தோஷ் அல்லிட் சர்வீஸ் என்ற ஏஜென்சி மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்வதற்காக ஃபரிதாபாத்தில் உள்ள QRG […]

திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் அரசு ஊழியர் இறந்து பல ஆண்டுகள் ஆனதால், கருணை […]