ஸ்ரீநகரில் தீவிரவாதிகளுக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் முன்பை விட தற்போது பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளது என அமித்ஷா பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு – காஷ்மீர் சென்றார். ரஜோரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர்அங்கு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில் , ’’ஜம்மு காஷ்மீர் […]

ஜம்மு-காஷ்மீரில் கொலை செய்யப்பட்ட ஹேமந்த்குமார் கொலைக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் டிஜிபி ஹேமந்த் காலை கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டில் கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றியது. அமித்ஷா இன்று பேரணி செல்ல இருந்த நிலையில் போலீஸ் உயரதிகாரி கொலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி […]

அரசுப் பேருந்துளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என பெண்கள் விரும்பும்பட்சத்தில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என போக்குவரத்த துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. எனவே தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனதும் முதல் 5 திட்டங்களில் அவர் கையெழுத்தில் பெண்களுக்கான இலவச பயணம் இருந்தது. […]

பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்ந்த ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் திரை அரங்கங்கள் நிரம்பி வழிவதால் தமிழ் திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகின்றன. லைகா தயாரிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து 4 நாட்களில் 250 கோடி  ரூபாய்க்கு வசூலில் சாதனை செய்துள்ளது. என கூறப்பட்டு வருகின்றது. அத்துடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீதுள்ள ஆர்வத்தால் மக்கள் நாளுக்கு நாள் […]

கருத்தரிப்பு மையங்கள், மத்திய அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என 4 வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாய், வாடகை தாய் […]

உத்தராகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 30 வீரர்களில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக வரும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் திரௌபதி கா தண்டா – 2 என்ற சிகரத்தில் உத்தரகாசி பகுதியில் நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 29 வீரர்கள் மலை ஏறச் சென்றனர். அப்போது பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 30 பேரும் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து எஸ்.டி.ஆர்.எஃப் ராணவம் மற்றும் ஐ.டி.பி.பி. பணியாளர்களால் மீட்பு […]

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் அக்.7, 8ஆம் தேதிகளில் திருச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒரு […]

திருச்சி மலைக்கோட்டை அருகே ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் மாநகரையே பரபரப்பாக்கிய பலூன் வியாபாரியை நீதிமன்றக் காவலில்வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நேற்று முன்தினம் ஜவுளி கடை வாசலில் ஹீலியம் பலூன் விற்றுக் கொண்டிருந்தார் அனார் சிங் என்ற உத்தரபிரதேச வியாபாரி. அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சிலிண்டர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் […]

நடிகர் கமல்ஹாசனின் ’பாபநாசம்’ பட பாணியில் கேரளாவில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் பிந்து குமார் (43). இவரை கடந்த 26ஆம் தேதி முதல் காணவில்லை என்று இவரது குடும்பத்தினர் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து பிந்துகுமாரை தீவிரமாக தேடி வந்தனர். காணாமல் போன பிந்து குமாரின் செல்போன் […]

தாய்லாந்தில் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மியானமருக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இன்று சொந்த ஊர் திரும்புகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் உள்பட 300 இந்தியர்கள் மியான்மரில் இது போல சிக்கித் தவிக்கின்றனர். இவர்களை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக […]