இயக்குனர் வெற்றிமாறன் பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ வானத்தை சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், வி.சி.க கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், ‘திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது என்று சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது’ என, பேசியுள்ளது கண்டனத்துக்குரியது.தமிழகம் ஹிந்துக்களின் ஆன்மிக பூமியாக இருந்து வருகிறது. அந்நிய […]

ரயில்வே அமைச்சகம் “TRAINS AT A GLANCE” (ரயில்கள் ஒரு பார்வை) என்ற புதிய காலநேர அட்டவணையை அக்டோபர் 1, 2022 அன்று வெளியிட்டது. இது இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான www.indianrailways.gov.in. –ல் இடம் பெற்றுள்ளது.புதிய காலநேர அட்டவணையின்படி சுமார் 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 130 சேவைகள் (65 […]

தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

முன்னாள் எம்எல்ஏ புனலூர் மது உடல்நல குறைபாடு காரணமாக காலமானார். கேரளா மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் தலைவருமான புனலூர் மது உடல் குறைபாடு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66. இதயம் தொடர்பான நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். புனலூர் மது முன்பு KSU-யின் மாநிலத் தலைவர், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர், KPCC உறுப்பினர் மற்றும் […]

போலி மருந்துகளை எளிதில் கண்டறிய மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து பாதுகாப்பானதா இல்லையா என்பது பலருக்கும் உறுதியாக தெரியாது. ஆனால் அதில் எது போலி என்பதற்கும் உண்மையானது என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை எப்படிக் கண்டுபிடிப்பது..? இந்த அபாயத்தைக் குறைக்கும் முயற்சியில், தரமற்ற மற்றும் போலிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறந்த மருந்து உற்பத்தியாளர்களுக்கான ‘ட்ராக் அண்ட் ட்ரேஸ்’ முறையை அரசாங்கம் […]

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில்; ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம்… மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ், பிருத்விராஜ், ஸதாவீதுராஜா பிரவீன்ராஜ் என்ற வயது 19 இளைஞர், ஈசாக் மற்றும் செல்வன். அண்டோ கெரிமஸ் ரவி ஆகிய […]

1-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்புகள்‌ வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை ஆன்லைன் மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம்… தமிழ்நாட்டில்‌ மைய அரசால்‌ சிறுபான்மையினராரக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ மத்திய / மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10ஆம்‌ வகுப்பு […]

விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG, UKG, 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கான அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று வெளியிட்டுவந்த பள்ளிக்கல்வித்துறை, இந்த ஆண்டில் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் இருந்து வந்தது. விஜயதசமி இன்று கொண்டாடப்பட உள்ள சூழலில், மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது . அரசுப்பள்ளிகளில் LKG, […]

நடிகர் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ் ’ திரைப்படம் வெளியிடப்படும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  சமீபத்தில்  ‘டான்’ திரைப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘பிரின்ஸ்’. இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர, நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் […]

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியிடம் வலியுறுத்தியதாக சசிதரூர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுகின்றது. வரும் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் இடையே நேரடி போட்டிஉள்ளது. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கட்சியின் மேலிட […]