fbpx

பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் திட்டம் என ‘புதுமைப் பெண்’ திட்டத்தை அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வரவேற்று பாராட்டியுள்ளார்.

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக எம்பி ரவீந்திரநாத் சாய்ரச்சை பூஜையில் கலந்துகொண்டு ராஜா அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்தார். இதையடுத்து, தங்கரதம் இழுத்து முருகனை வழிபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் …

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு ‘வாழும் காமராஜர்’ என்ற விருதை வழங்கிய போது, மாமேதையுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் எனக்கூறி விருதை ஏற்க மறுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் பெருந்தலைவர் காமராஜர் மக்கள் பேரவை சார்பில், முதலாமாண்டு துவக்க விழா, வாழும் காமராஜர் விருது வழங்கும் விழா …

பிரதமர் மோடியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளை வைத்து விவசாய நிலங்களை வாங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட வளாகம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மாவட்ட தலைமையகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில், இதில் …

வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி தொடர்பான புகார்களுக்கு மத்தியில் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரபல தொழிலதிபர் லலித் மோடி, லலித் மோடி 2010 முதல் லண்டனில் இருந்து வருகிறார்.. இதனிடையே நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் உடனான தனது உறவு நிலையை லலித் மோடி சமீபத்தில் அறிவித்தார்.. சுஷ்மிதா சென் உடன் எடுத்துக் …

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் …

ஒன்றிய அரசின் உத்தரவால் சமூக நல வாரியம் கலைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோரின் பிரச்சனைகளை களைவதற்கும் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ. ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை …

நாட்டில் 2021ஆம் ஆண்டில் மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், ”மூத்த குடிமக்கள் தொடர்புடைய 191 கொலை வழக்குகளில் கொலை செய்யப்பட்டவர்களில் 202 பேர் 60 வயதுக்கும் அதிகமானோர் ஆவர். தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு …

கனமழை காரணமாக பெங்களூருவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்கள் கனமழை தொடர்ந்து வருகிறது.. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது.. தொடர் கனமழை காரணமாக நேற்று பெங்களூரு வெள்ளக்காடாக காட்சியளித்தது.. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு …

போயஸ் தோட்ட இல்லத்திற்கு விரைவில் குடியேற இருப்பதாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ”போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பூர்வீக இல்லம் என்றும் அவர் மறைந்த பிறகு ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அந்த வீட்டில் ஜெயலலிதாவும், தனது …