fbpx

ஐஎஸ்பிஎல் என அழைக்கப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கியுள்ளார். இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே, இந்த டி10 தொடர்களும் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அந்தத் தொடர் தற்போது இந்தியாவிலும் அடுத்தாண்டு மார்ச் 2ஆம் தேதி …

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது, நீதிமன்றத்திற்கு சென்றபோது தலையில் முக்காடு போட்டு சென்றது உள்ளிட்டப் பல விஷயங்கள் குறித்து பேசினார். ‘கோச்சடையான்’ திரைப்பட வழக்கில் லதா ரஜினிகாந்த் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நான் …

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சின்னதிரையில் அறிமுகமானவர் காஜல் பசுபதி. பின்னர், சினிமாவில் வசூல்ராஜா எம்பிபிஎஸ், டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 என பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தன்னோடு டிவி நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். …

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அகரம் காலனி. இப்படத்தின் படப்பிடிப்பு செங்குன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று படப்பிடிப்பு தளத்தில் திடீரென மின்சார விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதில் லைட்மேன் சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். …

நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்த், விஜய் படத்தைத் தாக்கி பேசியுள்ளதாக புது சர்ச்சை வெடித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மற்றும் நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் இந்தாண்டு வெளியானது. இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்று, படம் வெளியானதும் ஏமாற்றம் அளித்தது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக …

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த இப்படம் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் என்கிற …

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று புகழப்படும் பாரதிராஜா, கிராமத்து கதைகளை உயிரோடு சினிமாவில் படைப்பதில் வல்லவர். இவர் அறிமுகம் செய்து வைத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் இன்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கின்றனர். அந்த வரிசையில் 1978ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சுதாகரை அறிமுகம் செய்து …

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்த முத்துக்காளை, கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவர். சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆசையில் தனது 18-வது வயதில் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக சில காலம் பணியாற்றிய அவர், 1997இல் பொன்மனம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு என் உயிர் நீதானே, நிலவே முகம் …

திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயின் உதவியாளர் மீது இளம்பெண் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த 26 வயது …

ராட்சசன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது ஹீரோயினாக உயர்ந்துள்ள அம்மு அபிராமி நடிப்பில் உருவாகியுள்ள ”ஜிகிரி தோஸ்த்து” படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும், சமீபத்தில் வெளியான ”கண்ணகி” படத்தில் முக்கியமான …