தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும், திருமணம் முடிந்த சில நாட்களில் தாய்லாந்து ஹனிமூனும் சென்றனர். அதன்பின் ஒரு வாரம் கழித்து ’ஜவான்’ படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார். கடந்த மாதம் ஸ்பெயின் சுற்றியுள்ள நாடுகளுக்கு மீண்டும் ஹனிமூன் சென்று ரொமான்ஸ் புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தார் நயன்தாரா. தற்போது இந்தியா […]
சினிமா 360°
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
இசை வெளியீட்டு விழாவுக்கு படத்தின் நாயகி வராத ஆத்திரத்தில், கே.ராஜன் மற்றும் நடிகர் கஞ்சா கருப்புக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து மேடையிலேயே சம்பந்தப்பட்ட நடிகையை ஆபாசமாக திட்டவைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ‘ஓங்காரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் கஞ்சா கருப்பு, இயக்குனர் மோகன் ஜி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஏ.ஆர். கேந்திர முனியசாமி என்பவர் […]
நவரச நாயகன் கார்த்திக் அக்கா – தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பழம்பெறும் நடிகர் முத்துராமன் என்பவரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக். இயக்குனர் பாரதிராஜா 1981ஆம் ஆண்டு இயக்கிய ’அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கார்த்திக். அதன்பிறகு தொடர்ந்து நல்ல நல்ல திரைக்கதை உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்துவந்த கார்த்திக், நவரச […]
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர். நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டவரும் ஆவார். இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு கோயில் கட்டி கொண்டாடப்பட்டதென்றால் அது நடிகை குஷ்புவுக்கு தான். கோயில் தொடங்கி இட்லி வரை குஷ்புவை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை 2000ஆம் ஆண்டு […]
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் சூர்யாவுடன் ‘கஜினி 2’ படத்திற்காக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தீனா’, ‘ரமணா’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து தமிழின் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், பின்னர் சூர்யாவுடன் கைக்கோர்த்து ‘கஜினி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த 2005ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சூர்யா – அசின் காட்சிகள் இளைஞர்களை ஈர்த்தது. இப்படம் […]
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று தொடங்க இருக்கிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், பிரியங்கா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் […]
ராஜ ராஜ சோழன் இந்துவா? முஸ்லிமா? எதற்கு இதெல்லாம், படத்தை எடுத்தோமா, சம்பாரிச்சோமா என்று இருக்கணும் என நடிகர் கஞ்சா கருப்பு பேசியுள்ளார். ’ஓங்காரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் மோகன் ஜி, நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, ”ஒரு நாள் தயாரிப்பாளராக இருந்து பாருங்கள், அப்போது தெரியும் அதன் […]
கே.ஜி.எஃப் பட நடிகர் யஷ்-க்கு சொந்தமான வாகனங்கள் முதல் ஆடம்பர பங்களா குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். யஷ் என்ற நவீன் குமார், கன்னட சினி உலகில் பல படங்கள் நடித்தாலும் ஆல் அட்ரஸ் இல்லாமல் இருந்தார். பின்னர், கே.ஜி.எஃப் படம் ஒன்றே இவரை புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது. இவரை யஷ் என்று அழைக்கப்படுவதை விட, ராக்கி பாய் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். அவர் தன் சட்டை பையில் […]
காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் கொடுத்து சென்றபின், நடிகை திவ்யா வீட்டின் கதவை நள்ளிரவில் அச்சுறுத்தும் விதமாக தட்டிய சீரியல் ஹீரோவால், போலீசார் தூக்கத்தை தொலைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சின்னத்திரை நடிகர்களான அர்ணவ் – திவ்யா காதல் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட மன கசப்பில் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், போரூர் அனைத்து மகளிர் போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை திவ்யா […]
67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் பெங்களூருவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான நாமினேஷன் பட்டியலில் உள்ள தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்களை காணலாம். தேசிய விருதுகள் போன்று முக்கிய விருதாக கருதப்படுவது ஃபிலிம் ஃபேர் விருதுகள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், சிறப்பான திறமையை வெளிப்படுத்திய திரைப்பட கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, […]