’காட்ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில், சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் திரைப்படத்தை […]

ஷீலா ராஜ்குமார் நடிப்பில் தமிழ் சினிமாவுக்கு புதிதாக அறிமுகமாகியுள்ளது ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ டூ லெட், மண்டேலா திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் ஷீலா ராஜ்குமார். இவர் நடிப்பில் அறிமுக இயக்குநர் பாக்யா எழுதி, இயக்கியுள்ள ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரூபி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட […]

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் இளம் காதல் ஜோடியை போலவே ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் முதல் மனைவியை சரியாகப் புரிந்து கொள்ளாத ரவீந்தர் தற்போது மகாலட்சுமிக்கு டெலிவரி பாய் மாதிரி அவர் நடிக்கும் சீரியல்களுக்கு எல்லாம் சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் வருகிறார். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ என பலரும் […]

போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட பிரபல நடிகையின் நிலத்தை புதிய சட்டத் திருத்தம் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் மீட்டுக் கொடுத்துள்ளார். பத்திரப்பதிவு துறையில் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமே நிலத்தைக் கொடுக்கக் கூடிய சட்டத் திருத்த மசோதா அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்த நிலையில் கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட […]

”ரஜினி படத்தின் வாய்ப்பை இழந்ததை எண்ணி வருத்தப்பட்டேன்” என நடிகை இந்துஜா தெரிவித்துள்ளார்.  துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் – தனுஷ் கூட்டணி 5-வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலைப்புலி எஸ். தாணு […]

ஆந்திராவில் பொன்னியின்செல்வன்  பட புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மணி ரத்தினத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி பேசியது வைரலாகி வருகின்றது.. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி மும்பை, ஐதராபாத், என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருகின்ற 30ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்திற்கான தெலுங்கு மொழி புரோமோஷன் […]

’ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயின் ’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ரஜினியை வைத்து படம் இயக்குகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்திற்கு ’ஜெயிலர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை […]

பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில மகளிரணி துணைத் தலைவரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய சினேகம் அறக்கட்டளை தொடர்பாக கடந்த மாதம் பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் […]

கோழிக்கோட்டில் உள்ள ஒரு மாலில் நடந்த நிகழ்ச்சியில், மலையாள நடிகைகள் 2 பேரிடம் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் வெளியாக உள்ள ஒரு சினிமாவின் விளம்பர நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மாலில் நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, சம்பந்தப்பட்ட சினிமாவில் நடித்த 2 இளம் நடிகைகள் உள்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சினிமா நட்சத்திரங்கள் வருவது குறித்து அறிந்ததும் மாலில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். […]

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் தெலுங்கில் பிரபாஸ் உடன் புராஜெக்ட் கே, ஷாரூக்கானுடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது வீட்டில் இருந்தபோது தீபிகா படுகோனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. […]