தனது மகனின் சிகிச்சையில் கவனம் செலுத்தி வருவதால், அரசியல் பாதைக்குள் இனி வரமாட்டேன் என நடிகர் நெப்போலியன் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும், மத்திய அமைச்சராக இருந்தபோதும் தொடர்ந்து […]
சினிமா 360°
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
’வெயில்’ படத்திற்குப் பிறகு நடிகர் பரத் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கரின் உதவி இயக்குநரான வசந்தபாலன் கடந்த 2006ஆம் ஆண்டு இயக்கி வெளிவந்த திரைப்படம் ‘வெயில்’. தமிழில் சிறந்தப் படம் என்ற தேசிய விருதைப் பெற்ற இப்படத்தில், பசுபதி, பரத், பாவனா, பிரியங்கா நாயர், ஸ்ரேயா ரெட்டி, ரவி மரியா, ஜி.எம். குமார், சாம்ஸ், டி.கே.கலா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எளிமையாக […]
நடிகர் ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 80-களின் இறுதியில் இருந்து, 90-களின் தொடக்கம் வரை பரபரப்பான ஹீரோவாக இருந்தவர் நடிகர் ராமராஜன். அப்போதைய முன்னணி நட்சத்திரங்களுடன் போட்டி போடும் அளவுக்கு அவரது படங்கள் வெற்றிபெற்று வந்தது. இவரின் படத்தை தயாரித்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆன தயாரிப்பாளர்களும் உண்டு. கடைசியாக 2012ஆம் ஆண்டு வெளியான ‘மேதை’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார். ஒரு கட்டத்தில் […]
பழம்பெரும் நடிகை சிறுநீரை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் வீடு கூட வாடகை வீடு என்று கூறப்படுகிறது. ஆறு வயது சிறுமியாக இருந்த போது கண்டனா படத்தின் மூலம் திரைக்கு […]