இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 61-வது படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ரஞ்சித் மற்றும் விக்ரம் ஆகியோர் தங்களின் மற்ற படங்களின் பணிகளை முடித்துள்ள நிலையில், விக்ரம் நடிக்கும் 61-வது படத்தை விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ படங்களை அடுத்து, விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் […]

விருகம்பாக்கத்தில் திரைப்பட கதாநாயகி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் ஜெசிகா. இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் […]

பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளர்களாக களமிறங்கப்போகும் பிரபரலங்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. எப்போதும் போல இந்த சீசனும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், பிக்பாஸ் சீசன் 6இல் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற கருத்து கணிப்பு […]

‘பொன்னியின் செல்வன் பாகம் 2′ இன்னும் 6 அல்லது 9 மாதங்களுக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1 செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தற்போது படக்குழுவினர் புரொமோஷன் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகம் வெளியான பிறகு 6 அல்லது 9 மாதங்களுக்கு […]

தனது மகனின் சிகிச்சையில் கவனம் செலுத்தி வருவதால், அரசியல் பாதைக்குள் இனி வரமாட்டேன் என நடிகர் நெப்போலியன் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும், மத்திய அமைச்சராக இருந்தபோதும் தொடர்ந்து […]

’வெயில்’ படத்திற்குப் பிறகு நடிகர் பரத் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கரின் உதவி இயக்குநரான வசந்தபாலன் கடந்த 2006ஆம் ஆண்டு இயக்கி வெளிவந்த திரைப்படம் ‘வெயில்’. தமிழில் சிறந்தப் படம் என்ற தேசிய விருதைப் பெற்ற இப்படத்தில், பசுபதி, பரத், பாவனா, பிரியங்கா நாயர், ஸ்ரேயா ரெட்டி, ரவி மரியா, ஜி.எம். குமார், சாம்ஸ், டி.கே.கலா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எளிமையாக […]

நடிகர் ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 80-களின் இறுதியில் இருந்து, 90-களின் தொடக்கம் வரை பரபரப்பான ஹீரோவாக இருந்தவர் நடிகர் ராமராஜன். அப்போதைய முன்னணி நட்சத்திரங்களுடன் போட்டி போடும் அளவுக்கு அவரது படங்கள் வெற்றிபெற்று வந்தது. இவரின் படத்தை தயாரித்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆன தயாரிப்பாளர்களும் உண்டு. கடைசியாக 2012ஆம் ஆண்டு வெளியான ‘மேதை’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார். ஒரு கட்டத்தில் […]

பழம்பெரும் நடிகை சிறுநீரை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் வீடு கூட வாடகை வீடு என்று கூறப்படுகிறது. ஆறு வயது சிறுமியாக இருந்த போது கண்டனா படத்தின் மூலம் திரைக்கு […]