கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா பெருந் தொற்று உலகையே முடக்கியது. இந்தத் தொற்று நோயால் உலகில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தப் பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து தற்போது தான் உலகம் மீண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு 230 பேருக்கு பரவிய இந்த […]

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கின்ற அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் இது தொடர்பாக […]

நாடு முழுவதும் சமீப காலமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் தமிழகத்தில் இந்த நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்த நோய் தொற்று பாதிப்பால் ஆங்காங்கே உயிர் பலியும் நிகழ்கிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மாநில அரசு […]

தமிழகத்தில் சமீபகாலமாக கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்று மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு சற்றே மெத்தனமாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் மாநில அரசு நோய் தொற்று பாதிப்பு மாநிலத்தில் கட்டுக்குள் இருப்பதாக […]

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு நாட்கள் செல்ல, செல்ல அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 100க்கும் குறைவாக இருந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் 300ஐ தாண்டி உள்ளது. நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல, மெல்ல அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வாரத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இத்தகைய நிலையில் இந்த மருத்துவமனையில் நோய் தொற்று சிகிச்சை […]

தமிழ்நாட்டில் குறைந்து வந்த நோய் தொற்று பாதிப்பு தற்போது மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், சுகாதாரதுறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆகவே தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்றுப் பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டு வருவதால் பொதுமக்கள் அனைவரும் வக்கவசம் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் அனைத்து மருத்துவமனைகளிலும் இனி 100% முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று […]

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து இருக்கின்ற நிலையில், சிகிச்சையில் இருப்பவரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த நான்கு மாத காலமாக கொரோனா தொற்று பரவல் குறைந்து இருந்த சூழ்நிலையில், தற்சமயம் அது மறுபடியும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் சுமார் 39 பேருக்கு புதிதாக நோய் தொற்று பரவல் கண்டறியப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. […]

கொரோனா வைரஸ் மற்றும் கொரோனா உருமாற்றம் பெற்ற வைரஸ்களுக்கு எதிராக எதிராக கோவேக்சின் தடுப்பூசியைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசிதான் அதிவேகமாக நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது என்று ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசியை இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் இந்தியன் வைரலாஜி நிறுவனம் சேர்ந்து உள்நாட்டில் தயாரித்த தடுப்பூசியாகும். இந்தத் தடுப்பூசி பழைய முறையான வைரஸை உயிரிழக்ச செய்து அதிலிருக்கும் ஸ்பைக் புரோட்டீன்களை வைத்து தயாரிக்கப்படும் மருந்தாகும். இந்த தடுப்பூசியானது, […]

சீனாவில் இருந்து இலங்கை வழியாக தமிழகத்தின் மதுரைக்கு வந்த ஒரு பெண் மற்றும் அவரது 6 வயது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விவரங்களை அளித்த மதுரை மாவட்ட ஆட்சியர், தாயும் குழந்தையும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், கூடுதல் பரிசோதனைக்காக மாதிரிகள் பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். நேற்று வரை, தமிழகத்தில் 51 செயலில் உள்ள கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகத்தின் […]

தமிழகத்தில் மேலும் புதிதாக 2,662 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,188 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும் தமிழகத்தில் இருந்த 2,658 நபர்களுக்கும் என மொத்தம் […]