கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நெரிசல் ஏற்பட்டபோது விஜய் சம்பவ இடத்தில் இல்லாமல் சென்னை திரும்பியது குறித்து அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்தத் துயரச் சம்பவம் நடந்து ஒரு மாதமாகும் […]

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் நேற்று தொழிலாளி ஒருவரை மறித்துத் தாக்கி, செல்போனை பறித்துச் சென்ற 3 கல்லூரி மாணவர்கள் குறித்த வழக்கில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழிப்பறி நடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அம்மாப்பேட்டை அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த அந்தக் கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். […]

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் இந்த விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல்வர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், […]

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் இலக்கினை நிறைவேற்றும் நோக்கில், அக்கட்சியின் தேர்தல் பணி வியூகங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கான அடித்தளமாக, மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் திமுகவில் இணைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். […]

தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருகிறது. முன்பு தினசரி பாதிப்பு 10 ஆக இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து 60-ஐ கடந்துள்ளது. பருவமழைக் காலத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்து வரவிருக்கும் இரண்டு மாதங்களில் இந்த நோய்த்தொற்று பாதிப்பு மேலும் இருமடங்காக உயரக்கூடும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் […]

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் பாரில் பெண் ஒருவரை அறைக்கு அழைத்த விவகாரத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரத்தில் ரிசார்ட் வைத்திருக்கும் வின்ஸ்டன் பிரபு (37) மற்றும் அவரது தம்பி திவாகர் அரவிந்த் (35) உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர், ஹோட்டலில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அதே பாரில் கொளத்தூரைச் சேர்ந்த அரவிந்தன் […]

பீடி மற்றும் திரைப்பட துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 1-ம் வகுப்பு முதல் கல்லூரி, ஐடிஐ / டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் […]

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்த அல்லியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 45), ஒரு தொழிலாளி. கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று தனது வீட்டிலிருந்தபோது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டன. இருப்பினும், திடீரென மருத்துவமனையில் இருந்து […]