காய்ச்சல் உள்ள மாணவர்கள் விடுமுறை எடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும், பள்ளிக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு, கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிக அளவில் இருப்பதால் மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க பள்ளி கல்வித்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சலுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மற்ற மாணவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது. இதனால், காய்ச்சல் உள்ள மாணவர்கள் […]

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பாண்டு மார்ச் மாதம் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதளத்தில் நோடிபிகேசன் பகுதியில் ‘எச்.எஸ்.இ. முதலாம் ஆண்டு தேர்வு, மார்ச் 2025 – ஸ்கிரிப்ட்ஸ் டவுன்லோடு’ என்பதை கிளிக் செய்து, அதில் காண்பிக்கப்படும் பக்கத்தில் தேர்வெண் […]

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 7 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இன்று ஈரோடு, […]

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற […]

சட்டப்பேரவை அறிவிப்பை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள 2000 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, […]

வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடக்க இருந்த, எஸ்.ஐ எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், 909 ஆண்கள்; 390 பெண்கள் என, 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஏப்ரலில் வெளியிட்டது. இதற்காக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் விண்ணப்பித்தனர். காவல் துறையில், இரண்டு மற்றும் முதல் நிலை காவலர்களாக, தலைமைக் காவலர்களாக பணிபுரிவோரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, […]

துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் […]

கூட்டுறவுத் துறையில் பயிர்க்கடனுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்குவது தொடர்பாக கூட்டுறவுத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு போன்றவற்றுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடன் வழங்குவது தொடர்பாக கூட்டுறவுத்துரை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், ”சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு […]

விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டார். சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த அருண் ராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இது எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். சிறு வயது முதலே மதச்சார்பற்ற அனைவரையும் உள்ளடக்கிய அரசியலின் மீது விருப்பம் இருந்தது. தேர்தல் வெற்றியை கடந்து அடிப்படை சமூக அரசியல் மாற்றத்திற்காக தலைவர் […]

2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். நிர்வாகிகள் நியமனம், நீக்கம், ஆலோசனைகள், கூட்டணி பேச்சுவார்த்தை என அதிரடியாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நிலை குறித்து விரைவில் […]