தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து, புதிய எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாள் மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில், திமுக 4 மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும். தமிழ்நாட்டில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும், விடுப்பட்டவர்களை இணைக்கும் நோக்கில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.14 கோடி பேர் பயனடைந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது. தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் […]

குறைந்த வட்டி விகிதத்தில் சுயதொழிலுக்காக வழங்கப்படும் கடன்திட்டத்தை சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கோரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு, சுய வேலைவாய்ப்பு […]

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூதாட்டி ஒருவர் பலி என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று நோயை மக்கள் மறந்திருந்த நிலையில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் இந்தியாவில் 363 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். […]

ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை பகுதியில் உள்ள சுவாமிநாத சுவாமி கோவிலில், அதிசய வடிவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலில் 11 திருமுகங்களும், 22 திருக்கரங்களும் கொண்ட முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய விஸ்வரூபம் காணப்படும் ஒரே தலம் இதுவாகும். பொதுவாக முருகப்பெருமான் பெரும்பாலான தலங்களில் ஒற்றை முகத்துடன், சில இடங்களில் மட்டும் இரு அல்லது மூன்று முகங்களுடன் காட்சி தருவார். ஆனால் குண்டுக்கரையில், மிகவும் விசித்திரமாக, […]

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு அருகில் இந்த கோயில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் முன் அலங்கார நுழைவு வாசல் உள்ளது. அதை கடந்து சென்றால், இடதுபுறத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார். அவரை வணங்கி விட்டு, கோவிலுக்குள் சென்றால் சித்தேசுவரரை தரிசிக்கலாம். கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. இதை அறிந்த மூலர் (திருமூலர்) என்ற யோகி, வயது மூப்பும், […]

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 50 பிரதம சங்கங்களின் மூலம் நாள்தோறும் 8,500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆவினில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : ஆவின் பணியின் பெயர் : கால்நடை உதவி மருத்துவர் பணியிடம் […]

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில், படத்தை எவ்வித தடையும் இல்லாமல் திரையிடவும், […]

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். இப்படத்தை கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என கன்னட […]