தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அனைவரும் , ’’ புலம்பெயர் தமிழர் நல வாரியத்தில் ’’ பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பதை தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும் அதை யாரும் நடைமுறையில் செய்வதில்லை. ஒவ்வொருவரும் அரசிடம் எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.. வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாக செல்பவர்கள் பல்வேறு சந்தர்ப்ப சூழலால் […]

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து , தமிழக அரசிற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக் காட்டி தமிழக பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. போன நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு ஆற்வறிக்கையை தயாரிக்க தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் […]

அறுவை சிகிச்சையை விரும்பாத தம்பதி வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே எருக்கூரைச் சேர்ந்தவர்கள் ஜான்-பெல்சியா தம்பதியினர். பெல்சியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பமானார். அனைவரும் எப்படி மாதந்தோறும்  மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை எடுப்பார்களோ அதே போல இவரும் சிகிச்சை எடுத்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது இரண்டாவது முறையாக பெல்சியா கருவுற்றிருந்தார். இரண்டாவது குழந்தையும் அறுவை […]

திருச்சி அருகே மாற்றுத் திறனாளிகளான இரண்டு சிறுவர்கள், தந்தையை இழந்து தாய் மற்றும் சகோதரியுடன் அவதிப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. எலக்ட்ரீசனாக பணியாற்றி வந்த கருப்பையாவிற்கு சரஸ்வதி, நாகலெட்சுமி என இரு மனைவிகள். முதல் மனைவி சரஸ்வதிக்கு நாகதேவி என்ற மகளும், 17 வயதில் மணிகண்டன், 16 வயதில் நந்தகுமார் என்ற […]

அதிமுகவில் இருந்த பழனியப்பன் அமமுகவுக்குச் சென்றார். அங்கிருந்து அவரை திமுகவுக்கு இழுத்து வந்தவர் தற்போதைய தமிக அரசியலில் ஆக்டோபஸ் என்று வர்ணிக்கப்படும் செந்தில் பாலாஜி . 2021 ஜுலை 3-ம் தேதி பழனியப்பன் திமுகவிற்கு வந்தபோதே உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவேன் என வாக்குறுதி கொடுத்தார் செந்தில் பாலாஜி. அதே நேரத்தில் பழனியப்பன் , திமுகவில் இணையும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் தருமபுரி […]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் , விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை , வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , தஞ்சாவூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , அரியலூர் , பெரம்பலூர் , திருச்சிராப்பள்ளி , மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் […]

தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

1-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்புகள்‌ வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை ஆன்லைன் மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம்… தமிழ்நாட்டில்‌ மைய அரசால்‌ சிறுபான்மையினராரக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ மத்திய / மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10ஆம்‌ வகுப்பு […]

விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG, UKG, 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கான அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று வெளியிட்டுவந்த பள்ளிக்கல்வித்துறை, இந்த ஆண்டில் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் இருந்து வந்தது. விஜயதசமி இன்று கொண்டாடப்பட உள்ள சூழலில், மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது . அரசுப்பள்ளிகளில் LKG, […]

குவைத்தில் வேலை பார்த்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காப்பாற்றுமாறு கோரி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது… சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த புவனா (37)  இவரது  கணவர் ஜேம்ஸ்பால். இவரது  நண்பர் ஜான்சன் என்பவரின் அறிவுரைப்படி குழந்தை பராமரிப்பு வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சேர கூடுதல் பணம் அவசியம் இருக்காது எனக்கூறியதால் புவனா இந்த வேலைக்கு சென்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் ஒருமாத்திலேயே […]