கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசி வருவதையடுத்து பெட்ரோலை கேன்களில் விற்பனை செய்யக்கூடது என்று மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் கோவை, பொள்ளாச்சி, மதுரை , ராமநாதபுரம் , உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் , பாஜவினர். , நிர்வாகிகள் வீடுகள் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு […]

சென்னை மாதவரம் அருகே நடித்துக்காட்டுவதற்காக தூக்கிட்டுக் கொண்ட 11 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் அருகே புழல் புத்தகரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் . இவருடைய இளைய மகன் கார்த்திக் . 11 வயதாகும் கார்த்திக் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கார்த்திக்கும் இவரது அண்ணனும் தூக்குபோட்டு விளையாடியுள்ளனர். விளையாட்டாக எப்படி தூக்கிட்டுக் கொள்வது என்பது போல நடித்துக் காண்பித்துக்கொண்டிருந்தான். அப்போது […]

தமிழகத்தில் பெட்ரோல்குண்டு கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்அறிக்கையில் ’’தமிழகத்தில் இந்து முன்னணி , ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகுள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு , தீ வைப்பு சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளனர். ஒரே நாளில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே […]

மதுரையில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து, அதை ஆண் நண்பருக்கு அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது 31). இவர் MBBS படித்து முடித்துவிட்டு கமுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். ஆசிக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இவரது கிளினிக் அருகேயுள்ள காளீஸ்வரி என்பவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, பி.எட்., படித்து […]

கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலக தயார் என செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார். வரும் 29ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் […]

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பு, பாஜக நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த இரண்டு தினங்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உடனே இதை […]

   ஒருவேலை பிரதமர் நரேந்திர மோடி படித்த பொலிடிகல் சையின்ஸ் படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் எனசொல்லியிருப்பார் ஜே.பி.நட்டா என பி.டி.ஆர். பதிலடி கொடுத்துள்ளார். தி.மு.கவில் படித்த தலைவர்கள் இல்லை அதனால்தான் நீட் தேர்வையும் தேசிய கல்வி கொள்கையையும் எதிர்க்கின்றனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இரண்டு நாள் பயணமாக பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா […]

சவுக்கு சங்கரை அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாகநீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துறை உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான நோட்டீசை பெற சவுக்கு சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் , அரசு ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் , ‘’சவுக்கு ’’ என்ற ஆன்லைன் இணையதளம் […]

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு 17 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். கோவை , பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம் , ஈரோடு உள்ளிட்ட பா.ஜ. அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடு, கார் மற்றும் கடைகளுக்கு பெட்ரோல் கு ண்டு வீசப்பட்டது. தீவைப்பு சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றன. இந்நிலையில், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் […]

குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என தாய் தொடர்ந்த வழக்கில் தந்தையிடம் குழந்தை வளர்வது சட்ட விரோதம் கிடையாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம் என்பவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இருவருக்கும் 10வயதில் மகன் இருக்கின்றான். இந்நிலையில் தம்பதி பிரிந்ததால் மகன் அவனது தந்தையோடு வசித்து வருகின்றான். இந்நிலையில் ஜெயசித்ரா, தன் மகனை கணவரிடம் இருந்து மீட்டு […]