fbpx

”பாஜக ஆட்சி தொடர்ந்தால் இங்கு எதுவும் நடக்கலாம்” என்று திமுக நாளேடான முரசொலி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நேருவின் தியாக வரலாற்றை மறைக்க நினைக்கின்றனர். நாளை தேசத் தந்தை காந்தியும், இருட்டடிப்புக்கு ஆளாகலாம்! இந்திய சுதந்திரத்தையும் சுபிட்சத்தையும் மோடியும், அமித்ஷாவும்தான் அரும்பாடுபட்டுக் கொண்டு வந்தனர் என்றுகூட வரலாற்றுத் திருத்தங்கள் உருவாக்கப்படலாம். இது சாத்தியமா? எனக் கேட்கலாம். …

கனல் கண்ணன் கைது நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை குறித்து பேசிய விவகாரத்தில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நபர் அளித்தவரின் பெயரில் சினிமா ‘ஸ்டன்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் நேற்று புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரது கைதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களை பதிவு …

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தலித்துகள் மீதான வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக கோபமடைந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பனா சந்த் மேக்வால், தனது சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியாத தான், எம்எல்ஏவாக இருக்க உரிமை இல்லை என்று கூறி, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.…

”வழக்கமான நடைமுறையின்படியே 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காமராஜர், ”11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற செய்தி எப்படி வெளிவந்தது? என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எப்போதும் இருக்கக்கூடிய தேர்வு முறைதான் இருக்கும். பொதுவாக தனியார் …

“நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது” என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார். …

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்ததோடு, நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்து கையசைத்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகளை செய்து வருகிறார். இதனால், அவர் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வெகுவாக குறைத்தும் …

பிரதமரை உருவாக்கும் தேசிய கட்சியில் கூட்டணி அமைப்பது உறுதி” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த வானகரத்தில் அமமுக-வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அடுத்த ஆண்டு திருச்சியில் பொதுக்குழு மாநாடு போல …

மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் தடைபட்ட, அரசுப் பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை சீரடைந்த …

தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் பேசிய அவர், “குடும்ப அரசியல் செய்வோரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுவதாகவும் குற்றம்சாட்டினார். இதை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும் என்றும் …

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து தமிழக மக்களுக்கு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய …