fbpx

சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், 110-ன் கீழ் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்போது, கிராம சபை கூட்டங்கள் நடத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், ஆண்டுக்கு …

தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியாருக்கு விற்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தனது விளக்க குறிப்பில்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது. மேலும், சமூக நலன், கல்வி …

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அதிமுக அரசு தடை செய்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் திமுகவுடன் கைகோர்த்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று …

மின்சாரத் துறையை முழுமையாக தனியார் மயமாக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி செய்வதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்ட மின்சார திருத்த சட்ட மசோதாவுக்கு முதலமைச்சர் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார். இந்த மசோதா …

திரைப்படலாசிரியர் சினேகன் மீது தேசிய மகளிர் ஆணையம் மற்றும் காவல் ஆணையரகத்தில் திரைப்பட நடிகை ஜெயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

திரைப்படலாசிரியர் சினேகன் கடந்த 5ஆம் தேதி, தனது சினேகம் தொண்டு நிறுவனப் பெயரை தவறாக பயன்படுத்தியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி மீது புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இன்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் …

”பீகாரில் வீசும் காற்று வெகு விரைவில் புதுச்சேரியிலும் வீசும், ரங்கசாமி வீட்டுக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை ஏலத்தினால் ரூ.4.50 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பீடு செய்தது. ஆனால், …

சென்னை ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் (7.8.2022), பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, G.S.T. சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா …

‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும்’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை ஏற்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சியுடன் …

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுதினத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் தரப்பு …

இலங்கையில் அதிபர் இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலைமை தான் தமிழ்நாட்டில் திமுகவுக்கு வரும் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”திமுகவுக்கு தலைவர் ஒருவர் தான்; ஆனால் அதிமுகவுக்கு தொண்டர்கள் …