fbpx

தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டம் தொடர்பாக ராயப்பேட்டையில் …

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரம் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமருடன் இணக்கம் காட்டியதாகவும், இருதரப்பும் அதிகம் விமர்சிக்காமல் சுமூகமாக நடந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, திமுக – பாஜக கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறது என்ற கோணத்தில் எல்லாம் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக …

ஆகஸ்ட் 1 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியனைக் கூண்டோடு நீக்கி பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி …

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கம் நியமனம் குறித்துத் தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தகவல் அனுப்பியுள்ளது.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியனைக் கூண்டோடு நீக்கி பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் …

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வந்தால் அதனை நாங்களே தெரிவிப்போம்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”15 இடங்களில் 30 வயதை கடந்த மகளிருக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையில் உள்ள புற்றுநோய் கண்டறியும் வகையில் இந்த முகாம் நடைபெற …

’வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற வெறும் ரூ.30 ஆயிரம் கட்டினால் போதும்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 97 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசியை பொறுத்தவரை 85.80 சதவீதம் பேர் …

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க …

இந்தியாவில் விரைவில் “ஸ்கைபஸ்” எனப்படும் பறக்கும் பேருந்துகளை தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ”மாசுபாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி ஒரு நல்ல உத்தி அல்ல. மாசுபாட்டைக் குறைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஸ்கைபஸ்களை தொடங்க விரும்புகிறோம்” …

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. தர்மமே மீண்டும் வெல்லும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்..

அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இரண்டாக பிரிந்துள்ள நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.. ஆனால் அவருக்கு நேரம் ஒதுக்கப்படாததால் டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு சென்னை திரும்பினார்.. …

”மாணவர்கள் பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலையும் மேம்படுத்த” என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசுகையில், ”செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்த பிரதமருக்கு மீண்டும் …