fbpx

தமிழக ஆளுநருடன், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, ”நம்முடைய நாடு முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை பெருமிதமாக கொண்டாட தேசியக்கொடியை நம் இல்லங்களில் ஏற்றுகிறோம். ஜம்மு-காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசியக்கொடி வரவழைக்கப்பட்டு, பாஜக அலுவலகத்தில் ஏற்றப்படும். …

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே போதைப்பொருள் பழக்கம் அதிகரிக்க காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த அதிமுக ஆட்சியில் போதைப்பொருளை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் …

பீகார் முதலமைச்சராக எட்டாவது முறையாக புதன்கிழமை பதவியேற்ற நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்..

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பிற பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் பீகாரில் புதிய ஆட்சி அமைத்துள்ளது.. இன்று பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி …

போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணைபோகும் நபர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் போதைப்பொருள் தடுப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் …

”அதிமுகவை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன்” என்று சசிகலா தெரிவித்தார்.

அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் காலமானதை அடுத்து அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து வி.கே.சசிகலாவும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுகவை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்று சூளுரைத்தார். அதிமுக …

”கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி சீனியராக இருந்ததால் அவரை முதலமைச்சர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்தார்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “அதிமுகவில் நடக்கும் சண்டையில் நான் இல்லை. நான் தனிக்கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அமமுகவின் பொதுக்குழு கூட்டம் …

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மாலை மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநிலத்தி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதா தள கூட்டணி அமைத்து போட்டியிட்டது.. இதில் பா.ஜ.க 74 …

மாவட்டம் தோறும் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டுமென தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். …

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன் தினம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது விவாதப் பொருளாகி உள்ளது. சுமார் 20 – 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.. இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. அப்போது “ அரசியல் குறித்து ஆளுநரிடம் விவாதித்தாகவும், அதை தற்போது பகிர்ந்து கொள்ள முடியாது என்று …

திமுக பொதுக்குழு உறுப்பினரான ஜெயக்குமாரை 3 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் தாக்கி கொலை செய்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானுர் அடுத்த கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவரது தாயார் முன்னால் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். …