fbpx

தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விநியோகம் செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு விற்கப்பட்டதால், பொதுமக்களும் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆனால், அந்த திட்டம் பின்னர் …

ஏனாமில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியில் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா, கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த மாதம் கோதாவரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு ஏனாம் பிராந்தியம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். …

5G அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி நடைபெற்றுவதாக திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”30 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றையை டிராய் என கூறப்படும் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தபோது, 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என வினோத் ராய் கூறினார். ஆனால், இன்று …

திமுக மீது புகார் தெரிவிப்பவர்கள் முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது, நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி ஊழல் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக …

தமிழ்நாட்டில் யாருக்கும் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லை என்றும், ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த …

அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்..

அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.. அதுவரை தற்போதைய நிலையே தொடரும் என்றும், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவும் ஓபிஎஸ் தரப்பு …

“ஆவின் பால் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்றும் துறை ரீதியான விசாரணையால் நியாயம் கிடைக்காது” என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது …

நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்தியது குறித்து எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் இரு அவைகளிலும் எம்பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டது. அதில், ஊழல், நாடகம், கபட நாடகம், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், திறமையற்றவர், அராஜகவாதி, …

நாட்டை விட்டு வெளியேற 81 சீனர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் விளக்கம் அளித்த அவர், ”விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருப்பது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற காரணங்களின் கீழ் சீனாவைச் சேர்ந்த 726 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் …

சென்னை-கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்கவில்லை என்றால் செப்டம்பர் 22ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் முதல் கேரள மாநிலம் கொல்லம் வரை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், …