fbpx

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அவ்வாறு இருந்தால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதேபோல் சென்னை, கோவை, திருச்சி, …

தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தினேன். இதனை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலுள்ள ஊராட்சி முகமை அலுவலகத்தில்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
சிறுபான்மையின …

மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்தவர்களை அனுப்பினால், இந்தியாவின் நிதி தலைநகரமாக மும்பை இருக்காது என மகாராஷ்டிர மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் அந்தேரியில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பேசுகையில், “பலமுறை மகாராஷ்டிர மக்களிடம் நான் கூறியுள்ளேன். குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தவர்களை இங்கிருந்து அனுப்பினால் உங்கள் கைகளில் …

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மின்சாரத்துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ”பல மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேலாக கடன் வைத்துள்ளதாகக் கூறினார். சில மாநில அரசுகள் …

’திமுக தலைவர் கூட நினைத்தால் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிடலாம்’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள தனியார் மஹாலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நடுறை மாவட்டம் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரன், “மதுரைக்காரர்களின் உள்ளம் பெரியது. ஆட்சி அதிகாரத்தை விரும்பி இருந்தால் …

மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஏற்காட்டில் எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ள துவக்கப் பள்ளியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. …

’மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை என்ற அழுத்தம் மத்திய அரசுக்கு இருக்கும் போதிலும் வலுவான மசோதாவை நிறைவேற்றாமல் உள்ளது’ என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

மனித கடத்தலுக்கு எதிரான உலக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற திமுக குழு துணை தலைவர் …

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 500 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கமிஷனர் ககன்தீப் சிங்பேடி, துணை மேயர் மகேஷ்குமார், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதுமே மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து கேள்வி எழுப்பினர். …

தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டம் தொடர்பாக ராயப்பேட்டையில் …

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரம் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமருடன் இணக்கம் காட்டியதாகவும், இருதரப்பும் அதிகம் விமர்சிக்காமல் சுமூகமாக நடந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, திமுக – பாஜக கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறது என்ற கோணத்தில் எல்லாம் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக …