fbpx

சமீப நாட்களாக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முதுகு காயத்தால் ஏற்பட்ட வலியுடன் போராடி வருகிறார்.

அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த புகைப்படம் துவக்கத்தில் போலியாக இருக்கக்கூடும் என நினைத்த நிலையில், …

இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, ஒரே ஆண்டில் இரண்டு முறை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது இந்திய அணி.

இந்தியா-ஜிம்பாப்பே இடையேயான மூன்று போட்டிகள் அடங்கிய ஒரு நாள் தொடரின் முதல் ஒரு நாள் போட்டி ஜிம்பாப்பேவில் ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இதில், …

FTX கிரிப்டோ கோப்பை ரேபிட் செஸ் போட்டியில் அமெரிக்க வீரரை தோற்கடித்து இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்தார்.

அமெரிக்காவின் மியாமியில் FTX கிரிப்டோ கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் நீமனை எதிர்கொண்டார். கடுமையான சவால் அளித்த நீமனே வெற்றி பெறுவார் என்று …

பிசிசிஐயின் முன்னாள் செயலாளரும், மூத்த நிர்வாகியும், புகழ்பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான அமிதாப் சவுத்ரியின் அகால மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது . அமிதாப் சவுத்ரி செவ்வாய்க்கிழமை காலை ராஞ்சியில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது இரங்கல் செய்தியில், ” அமிதாப் சவுத்ரியின் சோகமான மறைவு …

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியை விட்டு முழுவதுமாக விலகுவதாக தகவல் கசிந்துள்ளது.

ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2022 முடிவடைந்ததில் இருந்து சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் முற்றிலும் தொடர்பில்லாமல் இருந்து வருகிறார். 2022 ஐபிஎல் தொடரின் முதலில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால், அணியின் தொடர் தோல்வியால், பின்னர் பாதியிலேயே …

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்திருக்கும் ரோகித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்து அவரை முந்திருக்கிறார் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மார்டின் கப்டில்.

உலக டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை அடித்திருந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா முன்னிலையில் இருந்தார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் …

வி.வி.எஸ் லக்ஷ்மண் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்திய சுற்றுப்பயணத்திற்கான பயிற்சியாளர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தற்போதைய தலைவரான வி.வி.எஸ் லக்ஷ்மண் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார் என …

72 நாடுகள் பங்கேற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று முடிந்தது. போட்டிகளை முடிவடைந்ததை அடுத்து நிறைவு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிறைவு விழாவில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் அவன் இவன் படத்தில் இடம்பெற்ற ‘டியா டியா டோலே’ பாடலுக்கு அசத்தலாக 3 பெண்கள் நடனமாடியுள்ளனர். இந்த …

முதல் முறையாக இந்திய மகளிர் அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக பதக்கம் பெற்றுள்ளது. போர் நடந்து வரும் சூழலில் உக்ரைன் மகளிர் அணி தங்கப் …

காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் இப்போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் …