அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீதான சிபிஐ வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அமைச்சர் கே.என். நேருவின் சகோதர் ட்ரூடோம் இ.பி.சி இந்தியா நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் ரூ.30 கோடி கடன் பெற்றது.. இந்த தொகையை தன் துணை நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதால், தங்களுக்கு சுமார் ரூ.23 கோடி இழப்பு ஏற்பட்டதாக வங்கி தரப்பு புகார் அளித்திருந்தது.. இந்த புகாரின் அடிப்படையில் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது..
இதை தொடர்ந்து அமைச்சர் நேரு, அவரின் சகோதரர்கள், சகோதரி மட்டும் மகன் ஆகியோரின் வீடு, அலுவலகம் என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது..
சிபிஐ வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தனர்.. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.. ஆனால் இதற்கு மனுதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. இதையடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீதான சிபிஐ வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் மோசடி எதுவும் நடைபெறவில்லை எனவும், அரசு அதிகாரிகள் யாரும் சம்மந்தப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு சமரச தீர்வு மையத்திற்கு ரூ.15 செலுத்த நிபந்தனை விதித்து இந்த வழக்கை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Read More : தந்தை மீதான புகாரில் மகன்களை இழுத்துச் சென்ற போலீஸ்..!! – வீடியோ வெளியாகி பரபரப்பு