வெற்றி துரைசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!… தேடும்பணி தீவிரம்!

ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 4வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில், விபத்தில் சிக்கும் முன்பாக அவர் ஹோட்டல் ஒன்றில் இருந்து உணவு அருந்திவிட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 4 ஆம் தேதி சிம்லா, லடாக் பகுதிகளுக்கு தனது உதவியாளர் கோபிநாத்துடன் வெற்றி துரைசாமி சுற்றுலா சென்று இருந்தார். இருவரும் 4ஆம் தேதி பிற்பகல் சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த காரை என்பவர் ஓட்டினார். அப்போது, கார் ஓட்டுநர் தன்ஜினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி.. அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்த போலீஸார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் சென்றனர். அங்கு காரை மீட்ட போது அதில் தன்ஜின் உயிரிழந்திருந்தார். அது போல் அங்கிருந்த கற்கள் மீது விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றியை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சைதை துரைசாமியும் இமாசல பிரதேசம் சென்றுள்ளார். மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ 1 கோடி வழங்குவதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

4-வது நாளாக இமாச்சல பிரதேசம் சத்லெஜ் நதிக்கரையில் வெற்றி துரைசாமியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேச போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஐபோன் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல் பாறைகளுக்கு இடையே மூளை பாகம் ஒன்று கிடந்தது. இதை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து வெற்றி துரைசாமியை தேடு பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று இமாச்சல பிரதேச போலீசார் கூறியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அணை ஒன்று உள்ளது. அந்த பகுதி வரை தேடுதல் பணி நடத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, விபத்தில் சிக்கும் முன்பாக வெற்றி துரைசாமி உணவகம் ஒன்றிற்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. உணவகத்தில் இருந்து விபத்து எற்பட்ட இனோவா காரில் தனது உதவியாளருடன் வெற்றி துரைசாமி ஏறிச்செல்லும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தேடுதல் பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று தேடுதல் பணியில் இந்திய கடற்படையை சேர்ந்த நீச்சல் வீரர்கள் களம் இறங்க உள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று மாலை விபத்துக்குள்ளான பகுதிக்கு வந்துவிட்ட நிலையில், அணை பகுதியில் ஆழமாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட இருக்கின்றனர்.

Kokila

Next Post

அடம்பிடிக்கும் பிரேமலதாவால் விழிபிதுங்கி நிற்கும் கட்சிகள்..!! ஒரே போடு..!! இதுதான் எங்களுக்கு வேணும்..!!

Thu Feb 8 , 2024
பிப்.12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “இதுவரை கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம் காணுவதே பெரும்பாலான தேமுதிக நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. முந்தைய தேர்தலில் தேமுதிக தனது பலத்தை […]

You May Like