2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 30.04.2025 தேதியிட்ட அதன் முடிவின்படி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
1990 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் விதி 6-ன் படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு சார்ந்த கேள்விகள் /அட்டவணைகளை மத்திய அரசு சட்டப் பிரிவு 8-இன் துணைப்பிரிவு (1)-ன் கீழ் அதிகாரப்பூர்வ அரசிதழ் மூலம் அறிவிக்கிறது. தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் கேள்விகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 30.04.2025 தேதியிட்ட அதன் முடிவின்படி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பு கேள்விகள் இறுதி செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்படும்.
1948 மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 8 இன் துணைப்பிரிவு (2)-ன் கீழ், பதிலளிப்பவர் தனது சிறந்த ஞானம் அல்லது நம்பிக்கைக்கு ஏற்ப கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.



