நோட்…! ஓய்வூதிய ஒழுங்குமுறை விதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு…!

pension 2025

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பான ஒழுங்குமுறை விதிகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


மத்திய குடிமைப் பணிகளுக்கான (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்) விதிகள் 2025-ன்படி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மத்திய அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2024 ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, நிதிசார் சேவைகள் துறை ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியிட்டது. இதன்படி தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களாக உள்ள மத்திய அரசுப் பணியாளர்கள், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை விருப்பதின் பேரில் தேர்வு செய்ய முடியும். இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய குடிமைப்பணிகளுக்கான விதிமுறைகள் பின்வரும் திட்டங்களுக்கு பொருந்தும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலிருந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டு முன்னதாகவோ அல்லது சுய ஓய்வு அறிவிப்பிற்கு முன்னதாகவோ மாற்றிக் கொள்ள முடியும். இத்திட்டத்தில் தொழிலாளர் பங்களிப்பும் மற்றும் அரசின் பங்களிப்பும் அடங்கும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதுடன் அதனை தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் வரவு வைக்கப்பட வேண்டும்.

பணியின் போது இறப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்படும் பணியாளர்களுக்கு, மத்திய குடிமைப் பணிகளுக்கான (ஓய்வூதியம்) விதிமுறைகள், அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட விதிமுறைகளின் கீழ் பயன் பெறுவதற்கான விருப்பத் தேர்வுகள். பணியிலிருந்து ஓய்வு பெறுவது, பணிக்காலம் முடிவடைதற்கு முன்பே ஓய்வை அறிவிப்பது, விருப்ப ஓய்வு, பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது தன்னிச்சையான அமைப்பு பணியாளர்களை சேர்த்துக் கொள்வது அல்லது பணியிலிருந்து ராஜினாமா செய்வது மூலம் ஓய்வு பெறுவது போன்ற சூழல்களில் ஓய்வூதியப் பலனைப் பெறுவது.

கட்டாய ஓய்வு, பணிநீக்கம்,, சேவையிலிருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகளின் தாக்கம். பணியிலிருந்து ஓய்வு பெறும் போது துறை ரீதியான நடவடிக்கைகள் / நீதிமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றுக்கு மேற்கூறிய விதிமுறைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பழைய வழக்கில் திடீர் திருப்பம்..!! அமைச்சர் துரைமுருகனை நெருங்கும் கைது நடவடிக்கை..!! கோர்ட் உத்தரவால் பதறியடித்து போன் போட்ட CM..!!

Fri Sep 5 , 2025
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் மிக முக்கியமான பதவியை வகித்து வருகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் இவர், கடந்த 2006 முதல் 2011 வரையிலான கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2007 முதல் 2009 வரையிலான […]
Stalin Durai Murugan 2025

You May Like