ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மத்திய அரசு வேலை.. ரூ.69,100 சம்பளம்..!! செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

job2

மத்திய உள்துறையின் கீழ் இயங்கும் எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு விளையாட்டு வீரர்களுக்கே சிறப்பு கோட்டா வழியாக வழங்கப்படுகிறது. அதன்படி வில்வித்தை, தடகள விளையாட்டு, பேட்மிட்டன், பாக்ஸிங், சைக்கிளிங், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், மல்யுத்தம், யோகா, கராத்தே, நீச்சல், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் திறமை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிட விவரம்: ஆண்களுக்கு 197 மற்றும் பெண்களுக்கு 194 என மொத்தம் 391 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு: எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் பதவிக்கு ஆகஸ்ட் 1-ம் தேதியின்படி, விண்ணப்பிக்க 18 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும். மத்திய அரசு விதிமுறைகளின்படி, எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு உண்டு.

தகுதி:

* 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

* சர்வதேச, தேசிய அளவு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

* இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆண்கள் 170 செ.மீ உயரம் இருக்க வேண்டும்.

* பெண்கள் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். எஸ்டி மற்றும் சில குறிப்பிட்டு பகுதியை சேர்ந்தவர்களுக்கு தளர்வு உள்ளது.

* ஆண்களுக்கு மார்பக விரிவு 80 செ.மீ இருக்க வேண்டும். கண் பார்வை 6,/6 & 6.9 என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.

சம்பளம்: கான்ஸ்டபிள் பதவிக்கு நிலை 3-கீழ் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் செலவினங்கள் உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களில் விளையாட்டு மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அடுத்தக்கட்ட தேர்வு முறைக்கு அழைக்கப்படுவாரக்ள். சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு https://rectt.bsf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி:  இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி, நவம்பர் 4-ம் தேதி முடிவடைகிறது.

Read more: கரூர் சம்பவத்திற்கு பிறகு திமுக நடத்திய ரகசிய சர்வே..!! தவெக தனித்து போட்டியிட்டால்..!! அரசியல் களத்தையே மாற்றும் விஜய்..!!

English Summary

Central Government Job in Sports Quota.. Salary Rs.69,100..!! Great opportunity.. Don’t miss it..

Next Post

புறாக்களால் எதிர்பாராத நோய்கள் வரலாம்.. பால்கனியில் இருந்தால் உங்களுக்கு ஆபத்து..! நிபுணர்கள் வார்னிங்!

Thu Oct 16 , 2025
வீடுகளின் பால்கனிகள், ஜன்னல் ஓரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் புறாக்கள் அமர்ந்திருப்பதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்… பலர் அவற்றை அதிர்ஷ்ட அறிகுறிகளாகக் கருதுகிறார்கள்.. மேலும் அவற்றை அதிகம் கவனிப்பதில்லை. ஆனால் சுகாதார நிபுணர்கள் வேறுவிதமாக எச்சரிக்கின்றனர். வீட்டிற்குள் அல்லது அதைச் சுற்றி புறா எச்சம் இருப்பது வீட்டில் வசிப்பவர்களுக்கு கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். புறா எச்சம் அதிக அளவு அம்மோனியாவைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் […]
piegon

You May Like