Online Game: ஆன்லைன் பந்தயம், சூதாட்ட தளம்… சமூக ஊடக நிர்வாகத்தினருக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!

ஆன்லைன் பந்தயம், சூதாட்ட தளங்களை இடம் பெறச் செய்யும் சமூக ஊடக நிர்வாகத்தினருக்கு எதிராக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது

வெளிநாட்டு ஆன்லைன் பந்தயம், சூதாட்ட தளங்களின் விளம்பரங்களைத் தவிர்க்குமாறு சமூக ஊடக நிர்வாகத்தினரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விளம்பரங்கள் நுகர்வோர் மீது, குறிப்பாக இளைஞர்கள் மீது ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் குறிப்பிடத்தக்க நிதி மற்றும் சமூக-பொருளாதார தாக்கங்களைக் கொண்டுள்ளன என்று அமைச்சகம் கூறியுள்ளது.

இதுபோன்ற விளம்பரத்தின் மூலம் இந்திய பார்வையாளர்களை இலக்காகக் கொள்ளவேண்டாம் என்று ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்களுக்கு அமைச்சகம் மேலும் அறிவுறுத்தியுள்ளது. இதை மீறினால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிகளின் கீழ் சமூக ஊடக இடுகைகள் அல்லது கணக்குகளை அகற்றுவது அல்லது முடக்குவது மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் தண்டனை நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.

Vignesh

Next Post

இனி கவலை இல்லை!… மாற்றுத்திறனாளிகளுக்காக WhatsApp-ல் வருகிறது புது அப்டேட்!

Fri Mar 22 , 2024
WhatsApp: காது கேளா மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக அசத்தாலன அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் WhatsApp செயலி அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று வருகிறது. ஒருவரை […]

You May Like