பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கோதுமையின் இருப்பு விலையை 2023, மார்ச் 31 வரை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை மேலும் குறைக்க முடிவு செய்துள்ளது.
2023-24 ரபி சந்தைப்பருவம் உட்பட தனியாருக்கு விற்பனை செய்ய வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ், சுமாரான தரமுள்ள கோதுமையின் விலை குவிண்டாலுக்கு ரூ.2150 என்றும் குறிப்பிட்ட சில ரகங்களுக்கான தளர்வுடன் குவிண்டாலுக்கு (நாடுமுழுவதும்) ரூ.2125 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை இ-ஏலத்தில் பங்கேற்காமலேயே உத்தேச இருப்பு விலையில் தங்களின் சொந்தத் திட்டத்திற்காக இந்திய உணவுக் கழகத்திலிருந்து கோதுமையை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.
இருப்பு விலைக்குறைப்பு என்பது நுகர்வோருக்கான கோதுமை மற்றும் கோதுமைப் பொருட்களின் சந்தைவிலை குறைவதற்கு உதவும். இந்த திருத்தப்பட்ட இருப்பு விலையை 3-வது இ-ஏலத்திற்காக 17.02.2023 அன்று இந்திய உணவுக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த ஏலம் 22.02.2023 அன்று நடைபெறும்.