முக்கிய அப்டேட்…! TNPSC குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு…!

group 2 tnpsc 2025

குரூப்-2 தேர்​வுக்​கான 3-வது கட்ட சான்றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்தாய்வு, வரும் 23-ம் தேதி நடைபெறும் என டிஎன்​பிஎஸ்சி அறிவித்துள்​ளது.


இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: கடந்த 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 23-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

அழைப்பாணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் பங்கேற்க தவறினால், மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

6 கோடிக்கும் அதிகமானோர் ITR தாக்கல் செய்துள்ளனர்!. காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படுமா?. வருமான வரித்துறை பதில்!

Sun Sep 14 , 2025
வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான இதுவரை ஆறு கோடிக்கும் அதிகமான மக்களின் வருமான வரி வருமானத்தைப் பெற்றுள்ளதாக வருமான வரித் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. தொழில்முறை அமைப்புகள் அரசாங்கத்தை கடைசி தேதியை நீட்டிக்க வலியுறுத்தி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமான வரி தாக்கல் செய்யாத […]
income tax return itr 1200 1

You May Like