சென்னை மக்களே..! 20 முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…!

Chennai Metro 2025

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் 20 முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.


வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும், நீல வழித்தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.

அதன்படி, பராமரிப்பு பணி 20 முதல் 24-ம் தேதி வரை காலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல எவ்வித மாற்றமுமின்றி இயக்கப்படும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சாமானிய மக்களுக்கு இதுதான் தீபாவளி பரிசு!. கல்லா கட்டிய கார், பைக் நிறுவனங்கள்!. நிர்மலா சீதாராமன் விளக்கம்!

Sun Oct 19 , 2025
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நான்கு அடுக்குகளில் இருந்து, இரண்டு அடுக்குகளாக செப்., 22ல் குறைக்கப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் வர்த்தக துறையில் ஏற்பட்ட மாற்றம், பொதுமக்கள் அடைந்த பலன்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர், டில்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்து விரிவாக விளக்கினர். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் […]
nirmala sitharaman

You May Like