“செல்லம் ஐ லவ் யூ” கில்லி Rerelease: தமிழக வெற்றிக் கழகத்தினர், கேக் வெட்டி கொண்டாட்டம்…!

நாமக்கல்லில் கில்லி திரைப்படம் ரீ- ரீலிஸ் ஆனதால் தமிழக வெற்றிக் கழகத்தினர், ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதியன்று கில்லி திரைப்படம் வெளியானது. கில்லி படம் விஜய் ரசிகர்கள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்நிலையில், இப்படமானது 20 ஆண்டுகளுக்கு பின் இதே தேதியில் இன்று மீண்டும் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் ரீ ரீலிஸ் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.திரையரங்கில் கில்லி திரைப்படம் ரீ- ரீலிஸ் செய்யப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் திரையரங்கு வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய திரையரங்குகளில் விஜயின் கில்லி படம் இன்று காலை திரையிடப்பட்ட நிலையில் அனைத்து திரையரங்களும் இருக்கைகள் நிரம்பியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Read More: Bird Flu | வேகமெடுக்கும் பறவைக்காய்ச்சல்: அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன..!

Kathir

Next Post

Aravind Kejriwal | "முதல்வரை கொலை செய்ய சதி; பின்னணியில் மத்திய அரசு.? ".. டெல்லி அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்.!!

Sat Apr 20 , 2024
Aravind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் சிறையில் வைத்து அரவிந்த் கெஜ்ரிவாலை கொள்ள சதி நடக்கிறது என டெல்லி அமைச்சர் பகீர் தகவலை பகிர்ந்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் […]

You May Like