இன்று இந்த 21 மாவட்டத்தில் கனமழை…! சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


வரும் 28-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று முதல் 28-ம் தேதி வரை தமிழ்நாடு கடலோர பகுதிகளுக்கான மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

Vignesh

Next Post

சூப்பர் அறிவிப்பு..!! ’இந்த பழக்கத்தை மட்டும் கைவிட்டால் ரூ.1 லட்சம்’..!! சபாநாயகர் அதிரடி

Tue Oct 25 , 2022
பஞ்சாப் மாநிலத்தில் பயிர் கழிவுகளை எரிக்கும் பழக்கத்தை கைவிடும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ரூ.1 லட்சம் வழங்குவதாக அம்மாநில சபாநாயகர் அறிவித்துள்ளார். விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பது காற்று மாசுக்கான ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் விவசாயிகள் அதிகளவில் பயிர் கழிவுகளை எரிக்கின்றனர். பயிர் கழிவுகளை எரிப்பதால், நிலத்தின் வளத்தை இழப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் […]
சூப்பர் அறிவிப்பு..!! ’இந்த பழக்கத்தை மட்டும் கைவிட்டால் ரூ.1 லட்சம்’..!! சபாநாயகர் அதிரடி

You May Like