கடல் பகுதியில் சூறாவளி காற்று…! தென் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்…!

தென் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும். நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 6-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். வரும் 5, 6 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

விபத்தில் சிக்கி பிரபல புகைப்பட கலைஞர் உயிரிழப்பு...! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

Sat Mar 4 , 2023
பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் பயணித்த விஷ்ணு என்ற நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இந்த துயர சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் தனது இரங்கல் செய்தியில்; […]
IMG 20230304 063957

You May Like