அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்…! வானிலை மையம் தகவல்…!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 9-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் காலமானார்...!

Thu Apr 6 , 2023
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் மும்பையில் காலமானார். 78 வயதான அவருக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் […]
sudhir naik 1680712454974 1680712460159 1680712460159

You May Like