தமிழகத்தில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை…!

தமிழகத்தில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


வரும் 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

உங்களிடம் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இருக்கா..? உடனே இதை பண்ணுங்க..!! முக்கிய எச்சரிக்கை..!!

Sun Apr 9 , 2023
இந்தியா முழுவதும் கடந்த 2016ஆம் ஆண்டு பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அந்த சமயத்தில் இந்த நோட்டுக்களை பலரும் மாற்றாமல் விட்டு விட்டனர். அப்படி நீங்களும் இந்த நோட்டுகளை மாற்றாமல் வைத்திருந்தால் இப்போது உங்களுக்காக ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதாவது, இந்திய ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இணையத்தில் கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பழைய ரூ.500 மற்றும் […]
Money 500 1000

You May Like