மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்…! 9 மாவட்டத்தில் மழை எச்சரிக்கை தந்த வானிலை மையம்…!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த மூன்று தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

22-ம் தேதி தமிழ்நாடு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.நாளை மற்றும் நாளை மறுநாள் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழ்நாடு கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம் வங்கியில் போடப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை..!

Mon Dec 19 , 2022
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ரூ.1,000 வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது. பொங்கல் பரிசு தொகையை நேரடியாக வழங்குவதா அல்லது வங்கியில் போடுவதா உள்ளிட்ட நடைமுறை குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக இடம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். தமிழக […]
பொங்கல் பரிசுத்தொகை..!! சொன்ன தேதியில் வாங்க முடியாதவர்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா..?

You May Like