அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…! இந்த மாவட்டத்தில் மட்டும் தான்…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 14-ம் தேதி வரை தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும். 15-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை. வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம்.

Vignesh

Next Post

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க...! நாடு முழுவதும் இன்று முதல் 21-ம் தேதி வரை...! மத்திய அரசு அட்டகாசமான அறிவிப்பு...! ‌‌‌‌

Sun Mar 12 , 2023
நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் மற்றும் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்பில் உருவான பொருட்களைக் காட்சிப்படுத்தும் பிரத்தியேக நிகழ்ச்சியான ‘திவ்ய கலா மேளா’வை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்று முதல் 21-ம் தேதி வரை நடத்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நடத்த உள்ளது. ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளின் கைவினை, கலைப் […]
There is a risk of corona spreading more during festive season..! Central government warning to state governments..!

You May Like