இன்று பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 27 மின்சார ரயில் ரத்து செய்யபட்டுள்ளது.
சென்னையில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில், ஐடி துறை என பல்வேறு தேவைகளுக்காக அண்டை மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வசித்து வருகின்றனர். சென்னை மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன.
சென்னை பயணிகளுக்கு புறநகர் மின்சார ரயில் சேவைகள் என்பது பெரும் வரப்பிரசாதமாகும். சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையென்றால் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது. இந்த ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
தற்போது பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று 27 மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி
காலை 8:05 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 9:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 11:35 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரல்
காலை 9:54 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 11:25 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகல் 12 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 1 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 2:30 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 3:15 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை
காலை 8:35 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 10:15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகல் 12:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 1:05 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி
காலை 9:40 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து கும்முடிபூண்டி வரை செல்லும், ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பகல் 12:40 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து கும்முடிபூண்டி வரை செல்லும், ரயில் ரத்து செய்யப்படுகிறது.
மாலை 3:50 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து கும்முடிபூண்டி வரை செல்லும், ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் ரயில்
செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் காலை 9: 55 மணி ரயில், சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் வரை மாலை 3 மணிக்கு செல்லும் ரயில் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.
சிறப்பு ரயில்கள்: இதேபோன்று ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில் சென்ட்ரலில் இருந்து மீஞ்சூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னை கடற்கரை மற்றும் மீஞ்சூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.