முன்பெல்லாம் அசைவ உணவுகளுக்காகவே நாட்டுக்கோழிகளை வீட்டில் வளர்த்தவர்களும் உண்டு. பிராய்லர் கோழிகள் என்பதெல்லாம் அப்போது கிடையாது. கிராமத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறி கிடக்கும் சிறுதானியங்களை தின்றுவிட்டு உற்சாகமாக அங்குமிங்கும் திரியும் நாட்டுக்கோழிகளின் இறைச்சிக்கு சுவை அதிகம். ஆனாலும், விலையை கருத்தில் கொண்டு பெரும்பாலானோர் பிராய்லர் கோழி இறைச்சியை வாங்குகிறார்கள்.
பொதுவாக விடுமுறை காலங்களில் இறைச்சி விற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக உள்ளதால் கோழி இறைச்சியின் பயன்பாடே தற்போது மிகவும் அதிகமாக உள்ளது. சமைப்பது எளிது, சுவை போன்ற காரணங்களால் கோழி இறைச்சி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கோழிக்கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆடி மாதம் என்பதால் நாமக்கல் மண்டலத்தில் இந்த வாரம் சிக்கன் முட்டை விலை சரிந்துள்ளது. கடந்த வாரம் மொத்த விலையில் ரூ.110க்கு விற்பனையான கற்க்கோழி இன்று (ஆகஸ்ட் 3) ரூ.92க்கும், முட்டைக் கோழி ரூ.87க்கும் விற்பனையாகிறது. முட்டை விலை ரூ.4.55 காசுகளுக்கு விற்பனையாகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.180 – ரூ.200 வரை விற்பனையாகிறது.
Read more: பிரபல எழுத்தாளரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான பேராசியர் எம்.கே.சானு காலமானார்..!!