முதல்வர் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது.. சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி விழாவில் ஸ்டாலின் பங்கேற்க இருந்தார். இந்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது.. எனினும் வழக்கமான மருத்துவ பரிசோதனை என்றே கூறப்படுகிறது..
அப்போது 2 நாட்கள் ஓய்வெடுக்கவும் முதல்வருக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.. கோவை, திருப்பூருக்கு நாளை முதல்வர் செல்ல உள்ள நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.. மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளதால் முதலமைச்சரின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என்று கூறப்படுகிறது.. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : #Flash : ஓரணியில் தமிழ்நாடு.. மக்களிடம் OTP பெற இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி..